வாக்களிதோருக்கு மஸ்கோத் அல்வா கொடுத்த டிடிவி தினகரனை- வீடியோ

  • 6 years ago
ரூ.10 ஆயிரம் என கூறி மஸ்கோத் அல்வாவை கவரில் சுற்றி ரூ.20 டோக்கனை பெற்றுக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் டிடிவி தினகரன் ஆட்கள் பறந்ததால் ஆர்கே நகர் மக்கள் ஏமாற்றம் அடைந்ததாக கூறுகின்றனர். ஆர்கே நகர் இடைத்தேர்தல் கடந்த 21-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, தினகரன் அணி, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சியினர் போட்டியிட்டனர். கடந்த முறையை போல் இந்த முறையும் பணப்பட்டுவாடா புகார்கள் வந்தன. இதையும் மீறி குறித்த நேரத்தில் தேர்தல் நடைபெற்றது.

தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு நாளுக்கு முன்னர், டிடிவி தினகரன் ஆட்கள் ஆர்கே நகரில் உள்ள அனைத்து வீடுகளிலும் ரூ. 20 நோட்டை கொடுத்து டிடிவிக்கு வாக்களித்துவிட்டு அந்த நோட்டில் உள்ள சீரியல் எண்ணை செல்போன் மூலம் தெரிவித்தால் ரூ.10,000 வழங்கப்படும் என ஹவாலா முறையில் பணம் விநியோகம் செய்வதாக பாஜக வேட்பாளர் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இதையடுத்து ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் அமோகமாக வெற்றி பெற்றார். எனினும் ஒரு வாரம் ஆகியும் தங்களுக்கு பணம் கொடுக்காமல் டிடிவி தினகரன் தரப்பு ஏமாற்றிவிட்டதாக புகார்கள் எழுந்தன.

ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட மீனாம்பாள், நேதாஜி நகர், எழில் நகர் பகுதிகளில் வசிக்கும் வாக்காளர்களை நேற்று முன் தினம் செல்போன் மூலம் டிடிவி தினகரன் ஆட்கள் தொடர்பு கொண்டு ரூ.20 நோட்டை கொடுத்துவிட்டு உரிய பணத்தை வாங்கிச் செல்லுங்கள் என்று கூறினராம். இதை நம்பி ஏராளமானோர் அந்த மர்ம கும்பல் குறிப்பிட்டிருந்த கொடுங்கையூர் பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு ஒரு காரில் 3 பேர் அமர்ந்திருந்து இருந்தனர்.


TTV Dinakaran and their group promised RK Nagar voters that they will give money Rs. 10,000 for each vote, if they voted for him. After he won in the byelection, TTV group gave halwa instead of money.