போக்குவரத்து துறை பற்றி துரைமுருகன் ஆவேசபேட்டி- வீடியோ

  • 6 years ago

போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்குவதற்கு நிர்வாகமின்மையே காரணம் என்று திமுகவின் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்

வேலூர்மாவட்டம்,காட்பாடியில் மாநகராட்சி பொதுநிதியிலிருந்து 16 லட்சம் செலவில் கால்வாய் புதியதாக அமைக்கும் பணியை காட்பாடி சட்டமன்ற உறுப்பினரும் சட்டமன்ற எதிர்க்கட்சித்துணை தலைவருமான துரைமுருகன் துவங்கி வைத்தார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மருத்துவ கமிஷனை மத்திய அரசு அமைத்தால் அது தனியார் மருத்துவகல்லூரிகளுக்கு தான் சாதகமாக அமையும் என்றும் அரசு போக்குவரத்துகழகங்கள் முழுவதும் நஷ்டத்தில் இயங்குவதற்கு காரணம் நிர்வாக திறமையின்மையே என்றும் இப்படியே சென்றால் அரசு போக்குவரத்துகழகமே இல்லாத நிலை உருவாகும் என்றும் தற்போது அந்ததுறையின் அமைச்சராக இருப்பவருக்கு துறை பற்றிய போதிய அறி வில்லை அதனால் தான் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது இனி அரசு போக்குவரத்துகழகம் இருக்குமா என்பது சந்தேகமாக உள்ளது என்றும் தெரிவித்தார் மேலும் வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுங்கட்சியினர் அந்த 18 எம்.எல்.ஏக்களை சபையில் அனுமதித்தால் அவர்களுக்கும் பெரும்பான்மை இருக்கிறதா இல்லையா என்பது தெரியவரும் அனுமதிக்க தயாரா என்றம் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்

Des : DMK vice-president Thuramurugan said that the management is responsible for the failure of the transport sector.

Recommended