பாஜகவின் ஸ்லீப்பர்செல் தானாம் ரஜினி பியூஸ் மானுஸ் சொல்கிறார்

  • 6 years ago
நடிகர் ரஜினிக்காந்த் பாஜகவின் ஸ்லிப்பர் செல் என சமூக ஆர்வலர் பியுஷ் மானுஷ் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிக்காந்த் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார். அரசியலுக்கு வருவது உறுதி என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ரஜினியின் அறிவிப்புக்கு அவரது ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஆனால் அதேசமயம் ரஜினியின் அரசியல் வருகைக்கு சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

சமூக ஆர்வலரான பியூஷ் மானுஷ் சன்நியூஸ் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது பாஜக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எல்லாத்தையும் மாற்றிவிடுவோம் என டயலாக் பேசியதை போலவே ரஜினியும் பேசுகிறார் என அவர் குற்றம்சாட்டினார்.
சிஸ்டம் கெட்டு போயுள்ளதாக கூறும் ரஜினி எந்த சிஸ்டம் கெட்டுபோயுள்ளது தெளிவு படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். மோடியும் பிரதமராவதற்கு முன்பு இப்படிதான் டயலாக் பேசினார். ஆனால் அவர் பிரதமரான பின்புதான் எல்லையில் அதிக மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டினார்.

Social activist Piyush manush says Rajinikanth is a sleeper cell of BJP. BJP is directing Rajinikanth. Rajinikanth is speaking only cinema dialogues Piyush manush said.

Recommended