விஸ்வரூபம் 2 படத்திற்கு மேலும் ஒரு புதிய சர்ச்சை !!- வீடியோ

  • 6 years ago
தனது ட்வீட்களின் மூலம் அரசியல் களத்தில் புரட்சி செய்து வந்த கமல், சில வாரங்களாக ட்விட்டர் பக்கம் தலை காட்டாமல் அமைதியாக இருக்கிறார்.

கமல் நள்ளிரவில் போடும் ட்வீட்களால் தூக்கம் கெட்டவர்கள் ஏராளம். அவரது ட்வீட்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே அரசியல் கட்சியினரும் விழித்திருக்க வேண்டிய கட்டாயம்.

கமல் இயக்கத்தில் உருவாகி வரும் விஸ்வரூபம்-2 படத்தின் ஒலிச்சேர்க்கை பணிகள் அமெரிக்காவில் நடைபெற்று வருவதால் ட்வீட் போட நேரமில்லாமல் தவிக்கிறாராம். கமல்ஹாசன், ராகுல் போஸ், பூஜா குமார், ஆண்ட்ரியா நடிப்பில் 2013-ம் ஆண்டு ரிலீஸான படம் 'விஸ்வரூபம். முதல் பாகத்தை இயக்கும்போதே, இரண்டாம் பாகத்துக்கான பெரும்பாலான காட்சிகளையும் படமாக்கி வைத்திருந்தார் கமல்ஹாசன்.

கமல்ஹாசன், சில வாரங்களாக அமெரிக்காவில் முகாமிட்டு 'விஸ்வரூபம் 2' படத்தின் இறுதிகட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அங்கே நாள் முழுவதும் வேலை இருப்பதால் வேறு பணிகளில் கவனம் செலுத்த முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

விஸ்வரூபம் முதல் பாகம் வெளியானதும் உடனடியாக இரண்டாம் பாகம் தொடங்கப்பட்ட நிலையில், அதன் தயாரிப்பாளரான ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கும், கமலுக்கும் ஏற்பட்ட பைனான்ஸ் பிரச்னையால் படம் பாதியிலேயே நின்றது.
விஸ்வரூபம் முதல் பாகம் வெளியானதும் உடனடியாக இரண்டாம் பாகம் தொடங்கப்பட்ட நிலையில், அதன் தயாரிப்பாளரான ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கும், கமலுக்கும் ஏற்பட்ட பைனான்ஸ் பிரச்னையால் படம் பாதியிலேயே நின்றது.



Kamalhaasan has been camping in America for some days and is working on 'Viswaroopam 2'. Kamal's decision to settle the money given by Oscar Ravichandran and making 'Vishwaroopam 2' Now, Oscar Ravichandran is saying that he will not give up 'Viswaroopam 2'. So, Kamal has posted a photo on the backdrop of producers name on Twitter intentionally.

Recommended