பெரியபாண்டி உயிரிழந்ததில் கிளம்பியுள்ள புதிய சர்ச்சை- வீடியோ

  • 6 years ago


பெரிய பாண்டியனின் உடலை பிரேதபரிசோதனை செய்யவில்லை என்று ராஜஸ்தான் அரசு மருத்துவமனை மருத்துவர் தெரிவித்துள்ளதால் பெரிய பாண்டியனின் உடல் பிரேதபரிசோதனை செய்யபடாமலே அடக்கம் செய்யபட்டதா என்று பதிய சர்ச்சை கிளம்பியுள்ளது

கடந்த 14 ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் கொள்ளையர்களை பிடிக்க சென்ற மதுரவாயில் காவல் ஆய்வாளர் பெரியபாண்டி துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தார் .அவருடன் சென்ற இன்ஸ்பெக்டர் முனிசேகர் மற்றும் இரண்டு காவலர்கள் காயமடைந்தனர் பெரியபாண்டியன் மரணம் குறித்து ராஜஸ்தான் போலிசார் விசாரணை நடத்திய போது முனிசேகரின் துப்பாக்கில் இருந்த குண்டு பாய்ந்ததில் உயிரிழந்ததாக தெரிவித்தனர் மேலும் முனிசேகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின

இந்நிலையில் ராஜஸ்தான் மாநில மருத்துவர் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியனின் உடலை பிரேதபரிசோதனை செய்ய வில்லை என்று கூறியுள்ளார் இன்ஸ்பெக்டர் முனிசேகர் மற்றும் இரண்டு காவல்களுக்கு மட்டுமே சிகிச்சை அளித்ததாகவும் மருத்துவர் தெரிவித்தார்

அரசு மருத்துவர் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியனின் உடலை பிரேதபரிசோதனை செய்யவில்லை என்று கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து சென்ற இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி சுட்டுக்கொல்லப்பட்ட நாள் அன்று இணை ஆணையர் சந்தோஷ் விசாரணை செய்வதற்காக ராஜஸ்தான் சென்றார் .பெரியபாண்டி சுடப்பட்ட இடதையும் ஆய்வு செய்ததுடன் விசாரணை நடத்தினார் அதை தொடர்ந்து பெரிய பாண்டியன் உடலை தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கு அணைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று செய்துள்ளார் மரணம் அடைந்த இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியனின் உடல் பிரேதபரிசோதனை செய்யப்படாமலேயே தமிழகத்திற்கு போலிசார் எடுத்து வந்துள்ளனரா என்ற ஐயமும் எழுந்துள்ளது .

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி உயிரிழந்தது குறித்து ராஜஸ்தான் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்பெரியபாண்டி உயிரிழந்தது குறித்து நிதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது விசாரணை நடத்தினால் தான் உண்மை என்ன என்பது வெளி வரும்


Recommended