சாமி 2-வில் பெருமாள் பிச்சை இல்லை, மகன் ராவண பிச்சைதான்..வீடியோ

  • 6 years ago
ஹரி இயக்கத்தில், விக்ரம், த்ரிஷா, விவேக் ஆகியோர் நடித்த 'சாமி' படம் பெரிய வெற்றி பெற்றது. இந்தப் படத்தின் மூலம் தான் த்ரிஷா கமர்ஷியல் ஹீரோயின் ஆனார். தற்போது 'சாமி' படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தில் வில்லனாக பாபி சிம்ஹா நடித்து வருகிறார்.
மிகப்பெரிய வெற்றி பெற்ற 'சாமி' படத்தில் கோட்டா சீனிவாசராவ், பெருமாள் பிச்சை என்ற வேடத்தில் வில்லனாக நடித்திருந்தார். விக்ரமுக்கும் கோட்டா சீனிவாசராவுக்கும் இடையேயான வசனங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.
கோட்டா சீனிவாசராவின் மிரட்டலான நடிப்பு சாமி படத்திற்கு பலமாக அமைந்தது. இந்த நிலையில் தற்போது சாமி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் கோட்டா சீனிவாசராவ் நடிக்கவில்லை.
வில்லனாக கோட்டா சீனிவாசராவின் மகனாக பாபி சிம்ஹா, ராவண பிச்சை என்ற வேடத்தில் நடிக்கிறார். அந்த வகையில், பாபி சிம்ஹாவின் வில்லன் வேடம் மிக மிரட்டலாக உருவாக்கப்பட்டிருக்கிறதாம்.
சமீபத்தில், சென்னை மற்றும் பழனி பகுதிகளில் நடைபெற்ற ஷூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதில் படத்தில் இடம்பெறும் பேனர்களும் இடம்பெற்றுள்ளன.


In Hari's direction, 'Saamy' starring Vikram, Trisha and Vivek was a big hit. The second part of 'Saamy' - 'Saamy square' is currently being processed. Keerthi Suresh plays as heroine in this film. Bobby Simha is a villain in this film. Bobby Simha plays as Perumal pichai's son Raavana pichai role in 'Saamy square'.

Recommended