விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்கு பதிவு- வீடியோ

  • 6 years ago
ஆர் கே நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு இன்று காலை 8 மணிக்கு வாக்குபதிவு தொடங்கியது. காலையிலேயே பெண்கள் மற்றும் ஆண்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்குகளை பதிவு செய்தனர். வாக்குசாவடி மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வாக்கு பதிவு நடைபெற்றது.

ஆர்கே நகருக்கு இடைத்தேர்தல் இன்று வாக்கு பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் திமுக அதிமுக பாஜக உள்ளிட்ட முக்கிய கட்சி வேட்பாளர்களும் சுயேட்சைகள் என மொத்தம் 59 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். காலை 8 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கியது. திமுக வேட்பாளர் மருது கணேஷ் அரசு பள்ளியில் வாக்களித்தார். அதேபோல் அதிமுக வேட்பாளர் மது சூதனன் மாநகராட்சி பள்ளியில் உள்ள வாக்குசாவடிக்கு சென்று வாக்களித்தார். சுயேட்சை வேட்பாளர்களும் வாக்காளர்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

ஆர்கே நகர் தொகுதியில் மொத்தம் 258 வாக்குசாவடி மையங்கள் உள்ளது. அணைத்து வாக்கு சாவடி மையங்களுமே பதற்றமானவை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதுடன் ஒவ்வொரு வாக்குசாவடிக்கும் 50க்கும் மேற்பட்ட போலீசார் 15 க்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை போலீசாரும் துணை இராணுவத்தினரும் அப்பகுதி முழுவதும் வாகனங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். ஆர்கே நகர் தொகுதிக்கு வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்னர் தான் உள்ளே செல்ல போலீசார் அனுமதியளித்தனர். மாலை 5மணி வரை வாக்கு பதிவு நடைபெற்று பின்னர் வாக்கு பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இராணி மரி கல்லூரிக்கு எடுத்து செல்லப்பட்டு தனி அறையில் வைக்கப்பட்டது. 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசாரும் துணை ராணுவத்தினரும் வாக்கு பெட்டி அறையில் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். வரும் ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

Recommended