ஆர் ஜே பாலாஜி நிகழ்ச்சிக்கு ப்ரோமோஷன் பண்ணும் விக்னேஷ் சிவன்- வீடியோ

  • 6 years ago
ஆர்.ஜே. பாலாஜி தனது நண்பன் விக்னேஷ் சிவனை மூதேவி, டால்டா என்று செல்லமாக திட்டியுள்ளார். ஆர்.ஜே. பாலாஜி ஐஸ்ஹவுஸ் டூ ஒயிட் ஹவுஸ் என்கிற நிகழ்ச்சியை நடத்துகிறார். வரும் 24ம் தேதி இந்த நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது. நிகழ்ச்சி மாலை 7 மணிக்கு துவங்குகிறது. இந்த நிகழ்ச்சியை காண இயக்குனர் விக்னேஷ் சிவன் இரண்டு டிக்கெட்டுகள் வாங்கியுள்ளார்
என்ன சொல்லணும் இந்த ஷோவுக்கு எல்லோரும் போங்க என்பது தானே கான்செப்ட். இதுவரைக்கும் பாலாஜி நிறையே கேஸ் வாங்கியிருக்கிறார் இன்னும் கொஞ்சம் கேஸ் வாங்க ஒரு ஷோ பண்ணுகிறார். அந்த ஷோவை அனைவரும் பார்க்கவும் என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் பேசியுள்ள வீடியோவை வெளியிட்டு டேய் மூதேவி லவ் யூ என்றுள்ளார் ஆர்.ஜே. பாலாஜி.
பாலாஜியை வாழ்த்தியதுடன் அவரின் ஷோவுக்காக டிக்கெட்டை முன்பதிவு செய்யும் புக்மைஷோ லிங்க்கையும் சேர்ந்து ட்வீட்டியுள்ளார் விக்னேஷ் சிவன்.
நன்றி டா டால்டா. இப்படி பப்ளிக்காக பாசத்தை காண்பிப்பது வெட்கமாக உள்ளது ஆனால் இருப்பினும்... என்று தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார் பாலாஜி.
விக்னேஷ் சிவன் வாங்கிய 2 டிக்கெட்டுகளில் இன்னொன்று யாருக்கு என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கிடையே சூர்யா ரசிகர்கள் இடையே வந்து டிஎஸ்கே அப்டேட் கேட்கிறார்கள்.


RJ Balaji and his good friend director Vignesh Shivan had a jolly chat on twitter. Vicky has bought two tickets for RJ Balaji's show 'Ice House to White House' which will be held in Chennai on december 24th.

Recommended