அரவிந்த் சாமி அழகுக்கு காரணம்-அமலா பாலுக்கு தெரியும்-வீடியோ

  • 6 years ago
அரவிந்த் சாமி இந்த வயதிலும் அழகாக இருப்பதன் ரகசியத்தை தெரிவித்துள்ளார் அமலா பால். சித்திக் இயக்கத்தில் அரவிந்த் சாமி, அமலா பால், பேபி நைனிகா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் பாஸ்கர் ஒரு ராஸ்கல். படத்திற்கு அம்ரேஷ் கணேஷ் இசையமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அமலா பால் கூறியதாவது,

ஒரு படம் ரிலீஸானால் எனக்காக நன்றாக ஓட வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிப்பேன். ஆனால் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம் முருகன் சாருக்காக சூப்பர் ஹிட்டாக வேண்டும் என நான் வேண்டிக்கிறேன்.

தயாரிப்பாளர் என்பதையும் தாண்டி முருகன் சார் படத்தின் அனைத்து விஷயங்களிலும் ஈடுபாட்டுடன் வேலை செய்தார். சித்திக் சாரின் முதல் படம் வெளியானபோது நான் பிறக்கவில்லை.

நான் கல்லூரியில் படித்தபோது அவரின் முதல் படத்தில் வந்த வசனங்களை சொல்லித் தான் ஒருவரையொருவர் கலாய்த்தோம். அந்த அளவுக்கு டிரெண்டி அவர்.


Actress Amala Paul has revealed the beauty secret of her Bhaskar oru Rascal movie co-star Arvind Swami. She said that he is handsome because of his inner beauty.

Recommended