விஜய், சூர்யாவை ஓவர் டேக் செய்த கோஹ்லி - அனுஷ்கா! ஆனால்...வீடியோ

  • 6 years ago
சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் சாதனையை விராட் கோஹ்லி - அனுஷ்கா சர்மாவின் திருமணம் முறியடித்திருக்கிறது. இது என்ன, மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுறீங்க..? எனக் கேட்கிறீர்களா? 'ஆமாங்க, உங்களுக்கு மொட்டைத் தலை புரிஞ்சா மொட்டைத்தலை... முழங்கால் புரிஞ்சா முழங்கால்'. அனுஷ்கா சர்மாவுடனான திருமணத்தைப் பற்றி விராட் கோஹ்லி பதிவிட்ட ட்வீட் இதுவரை 85 ஆயிரம் ரீ-ட்வீட்களை கடந்து சாதனை படைத்திருக்கிறது.
விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மெகா ஹிட் ஆன படம் 'மெர்சல்'. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தான் இந்தியாவிலேயே அதிகம் பேர் ரீ-ட்வீட் செய்த ட்வீட்டாக இருந்தது. இந்த ட்வீட்டை 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் RT செய்துள்ளனர்.
'மெர்சல்' ஃபர்ஸ்ட் லுக் ட்வீட்டை சூர்யா நடித்திருக்கும் 'தானா சேர்ந்த கூட்டம்' செகண்ட் லுக் முறியடித்து தற்போது வரை 75 ஆயிரம் RT ஆகியுள்ளது. வருடம் முடியும் தருவாயில் இவை தான் இந்தியாவிலேயே அதிகம் RT ஆன ட்வீட்களாக இருந்தன.
மெர்சல் ட்வீட் சாதனை படைத்ததை விஜய் ரசிகர்கள் செமயாக கொண்டாடினர். சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' மெர்சல் படத்தின் சாதனையை முறியடித்ததை தொடர்ந்து சூர்யா ரசிகர்கள் ட்விட்டரில் ஹேஸ்டேக் உருவாக்கி தெறிக்க விட்டனர். இந்தச் சாதனையை அசால்ட்டாக தகர்த்துள்ளார் கோஹ்லி.
தற்போது தனக்கும் அனுஷ்கா ஷர்மாவிற்கும் நடந்த திருமணம் குறித்து நேற்று முன்தினம் விராட் கோஹ்லி ட்வீட் செய்தார். அந்த ட்வீட் தாறுமாறாக ரீ-ட்வீட் ஆகி தற்போது வரை 85 ஆயிரம் RT ஆகியிருக்கிறது. 'தானா சேர்ந்த கூட்டம்' சாதனையை வருட இறுதியில் அசால்ட்டாக முறியடித்துவிட்டார் கோஹ்லி.


Virat Kohli - Anushka Sharma's marriage has breaks the record of Surya's 'Thaana Serndha koottam' second look tweet. Kohli's tweet about the marriage with Anushka Sharma has so far surpassed 85k re-tweets on twitter. This is the golden tweet of the year 2017.

Recommended