திடிரென்று நடந்த கோஹ்லி அனுஷ்கா திருமணம்.!!..வீடியோ

  • 6 years ago
கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி, நடிகை அனுஷ்கா சர்மாவுக்கு வாழ்த்துக்கள் வந்து குவிகிறது. கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவின் திருமணம் வரும் 15ம் தேதி இத்தாலியின் டஸ்கனி நகரில் நடக்கிறது என்று கூறப்பட்டது. இந்நிலையில் நேற்றே திருமணம் முடிந்துவிட்டது. இதை அனுஷ்காவே ட்விட்டரில் புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளார்.
காதலித்த காலத்தில் இருந்து ரகசியம் காப்பது அனுஷ்கா, கோஹ்லிக்கு வழக்கமாகிவிட்டது. திருமணத்தையும் யாருக்கும் சொல்லாமல் திடீர் என்று நடத்தியுள்ளனர்.
கோஹ்லி என்னை திருமணம் செய்து கொள்வாயா என்று கேட்க அனுஷ்கா சரி என்று சொல்லியுள்ளார். இதையடுத்து கோஹ்லி அனுஷ்காவுக்கு மோதிரம் போட்ட நிகழ்ச்சி இத்தாலியில் நடந்துள்ளது.
இத்தாலியில் என்றாலும் பஞ்சாபி முறைப்படி திருமணம் நடந்துள்ளது. அனுஷ்கா-கோஹ்லியின் திருமண புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
இத்தாலியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் இரு வீட்டு உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். வரும் 21ம் தேதி டெல்லியிலும், 26ம் தேதி மும்பையிலும் பிரமாண்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
திருமணத்திற்கு பிறகு அனுஷ்காவும், கோஹ்லியும் மும்பை வோர்லி பகுதியில் வசிக்க உள்ளனர். கோஹ்லி அனுஷ்காவுக்காக டெல்லியில் இருந்து மும்பைக்கு ஜாகையை மாற்றுகிறார்.


One of the most popular couples in town, Virat Kohli and Anushka Sharma got hitched in a private ceremony yesterday in the morning.Ever since 'Virushka' as fans lovingly call them made their wedding announcement on Twitter, there has been a flood of inside pictures and video on social media.

Recommended