காவல் ஆய்வாளரின் மரணத்தை தொடர்ந்து காவலர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் என்ன?- வீடியோ

  • 7 years ago
குற்றவாளிகளை பிடிக்க வெளிமாநிலங்களுக்கு தனிப்படை போலீசாரை அனுப்பும் போது ஆயுதப்படை காவலர்களை துப்பாக்கிகளுடன் அனுப்ப வேண்டும் என்று தமிழக காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை கொளத்தூரில் நடந்த நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் சம்மந்தப்பட்ட ராஜஸ்தான் கொள்ளையர்களை பிடிக்க சென்ற போது ஆய்வாளர் பெரியமாண்டி கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட மரணச் செய்தி தமிழக காவலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறப்பாக செயல்படும் காவல் ஆய்வாளரை இழந்த வருத்தத்தில் இருக்கும் சக காவலர்கள் இந்த சமயத்தில் காவல்துறை செய்ய வேண்டியது என்ன என்றும் கூறுகின்றனர்

தமிழகத்தில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்தவர்களும் பணி நிமித்தமாக வந்து தங்குகின்றனர். அவர்களில் சிலர் கொலை, கொள்ளை செய்துவிட்டு சொந்த மாநிலங்களுக்கு தப்பிவிடுகின்றனர். அப்படி தப்பிக்கும் குற்றவாளிகளைத் தேடி தனிப்படை போலீசார் பீஹார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு செல்ல நேரிடுகிறது.

Recommended