300 கொலைகள் செய்த கொடூர சீரியல் கில்லர்- வீடியோ

  • 7 years ago
அமெரிக்காவை சேர்ந்த கொலையாளி ஒருவர் தான் செய்த கொலைகள் குறித்து பத்திரிக்கையில் விளம்பரம் கொடுத்துள்ளார். இந்த விளம்பரத்தின் மூலம் 'டோட் கோல்ஹீப்' என்ற அந்த நபர் போலீசிடம் மாட்டி உள்ளார். தற்போது அவர் இந்த விளம்பரம் கொடுத்தற்கான காரணம் என்ன என்று கூறியுள்ளார். மேலும் எத்தனை கொலைகள் செய்தேன், எப்படி செய்தேன் என்று அவர் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த செய்திக்கு வந்த பின் சிலர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இவர் 300க்கும் அதிகமான கொலைகள் செய்து இருக்க வாய்ப்பு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அமெரிக்காவை சேர்ந்த 'டோட் கோல்ஹீப்' என்ற நபர் சில நாட்களுக்கு முன்பு அங்கு இருக்கும் பத்திரிக்கை ஒன்றில் விளம்பரம் ஒன்று கொடுத்துள்ளார். அதில் தன் வீட்டில் நிறைய பெண்களை கொலை செய்து அடைத்து வைத்து இருப்பதாக கூறியுள்ளார். இந்த நிலையில் போலீஸ் அவர் வீட்டில் சோதனை செய்ததில் உண்மையிலேயே அவர் வீட்டில் நிறைய பெண்கள் அடைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

முதலில் போலீஸ் இது பொய்யான விளம்பரமாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு கடந்து போக நினைத்து இருக்கிறது. ஆனால் அவர் வீட்டில் சோதனை செய்த போது ஒரே அறையில் மொத்தம் 7 பெண்கள் கொலை செய்யப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. அந்த 7 பேரும் வெவ்வேறு நாட்களில் காணாமல் போனவர்கள். அவர்கள் கொலை செய்யப்படுவதற்கு முன்பு மிகவும் மோசமாக துன்புறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில் இன்னொரு அறையில் ஒரேயொரு பெண் உயிருடன் மீட்கப்பட்டு இருக்கிறார். அவருடைய தலை மட்டும் ஒரு சிறிய அடைப்பானுக்குள் வைக்கப்பட்டு மூச்சு விடும்படி துளைகள் போட்டு 1 வருடத்திற்கும் மேலாக அதே மாதிரி வைக்கப்பட்டு இருக்கிறார். அந்த பெண் தற்போது வாக்குமூலம் அளித்துள்ளார். அதன்படி அந்த கொலைகாரன் 300க்கும் அதிகமான கொலைகள் செய்துள்ளதாக தன்னிடம் கூறியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

Recommended