செய்தியாளர்களை தவிர்த்து கேமராமேன்களுக்கு மட்டும் பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார்!- வீடியோ

  • 6 years ago
அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை தவிர்த்து கேமரா மேன்களுக்கு மட்டும் பேட்டியளித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்ட மீனவ பிரதிநிதிகள் மாயமான மீனவர்களை மீட்டுத்தரக்கோரி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று சந்தித்தனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் மீனவ பிரதிநிதிகள் சந்தித்தனர். இதைத்தொடர்ந்து மீனவ பிரதிநிதிகள் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது தங்களின் கோரிக்கைகளை கூடிய விரைவில் நிறைவேற்றுவதாக முதல்வர் உறுதியளித்ததாக அவர்கள் தெரிவித்தனர். மேலும் புயலில் சிக்கி இறந்த மீனவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை பற்றி பரிசீலிப்பதாக முதல்வர் கூறியிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமார் கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வரின் வீட்டில் இருந்தபடியே செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது செய்தியாளர்களை தவிர்த்து கேமராமேன்களுக்கு மட்டும் அவர் பேட்டியளித்தார்.

அப்போது ஓகி புயலால் காணாமல் போன மீனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார். மீட்பு பணியில் கப்பல், மற்றும் விமானப்படையை பயன்படுத்துவதாகவும் அவர் கூறினார்.




Minister Jayakumar met only cameramans, he refused to talk with reporters. He said Tamilnadu fishermans are safe in other states.

Recommended