இனி காருக்கு டீசல் ஊற்ற வேண்டியதில்லை.. பீர் ஊற்றினால் போதும்.. நிற்காம ஓடும்!- வீடியோ

  • 7 years ago
டீசல் மற்றும் பெட்ரோலுக்கு மாற்றாக இனி பீர் இருக்கும் என்றும் பிரிட்டன் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பியரை ஊற்றி வாகனம் ஓட்டலாம் என்று கூறுகின்றனர்.
இதற்காக பியரில் சிறு சிறு மாற்றங்கள் மட்டும் செய்தால் போதும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கின்றனர். இதற்காக அந்த விஞ்ஞானிகள் பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு இருக்கிறார்கள்.
இது எதிர்காலத்தில் மிகப்பெரிய அளவில் எரிபொருள் தேவையை தீர்க்கும் என்று கூறப்பட்டு இருக்கிறது. மேலும் இது உலகின் பொருளாதாரத்தையே மாற்றும் என்றும் விஞ்ஞானிகள் சொல்லியிருக்கின்றனர்.பிரிட்டனை சேர்ந்த விஞ்ஞானிகள் தற்போது பயன்பாட்டில் இருக்கும் எரிபொருட்களான டீசல் மற்றும் பெட்ரோலுக்கு மாற்றாக புதிய எரிபொருளை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இதற்காக அவர்கள் மது வகைகளில் நிறைய சோதனைகள் செய்தனர். ஏனெனில் மதுவில் இருக்கும் எத்தனால், பியூட்டனாலாக மாறினால் அதை எரிபொருளாக பயன்படுத்த முடியும்.

இந்த நிலையில் இவர்களது ஆராய்ச்சி தொடர்ந்து தோல்வியில் முடிந்து இருக்கிறது. மது வகைகளில் இருக்கும் எத்தனாலை பியூட்டனாலாக மாற்றவே முடியவில்லை. அப்படியே மாற்றினாலும் அது வாகனத்திற்கு மிகவும் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மிகவும் குறைவான திறனையே அந்த எரிபொருட்கள் கொண்டு இருக்கின்றது.

Beer will replace diesel and petrol in future as fuel for car and bike. Britain researchers made a break through using beer as the fuel for four wheeler.

Recommended