ஜெ. நினைவுதின மவுன ஊர்வலத்தில் சிரித்துக் கொண்டே எடப்பாடியாரை முந்தி ஓடும் ஓபிஎஸ்!- வீடியோ

  • 7 years ago
ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி, அதிமுவினர் நடத்திய மவுன ஊர்வலத்தில் கலந்து கொண்ட துணை முதல்வர் ஓபிஎஸ், சிரித்துக் கொண்டே முதல்வரை முந்தி செல்லும் காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளது. இதுதான் துக்கமா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஜெயலலிதாவுக்கு இன்று முதலாம் ஆண்டு நினைவஞ்சலி தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி மக்களும், அதிமுக தொண்டர்களும் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முதலாண்டு நினைவு தினத்தை துக்க தினமாக அனுசரித்து முதல்வர் ஈபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் கறுப்பு சட்டை அணிந்து அமைதி பேரணியாக வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலையில் இருந்து ஜெயலலிதா நினைவிடம் வரை ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு பேரணி நடைபெற்றது. அண்ணா சாலையில் தொடங்கிய பேரணி வாலாஜா சாலை வழியாக மெரினாவை வந்தடைந்தது.இந்த பேரணியின் போது முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மூத்த நிர்வாகிகள் என ஊர்வலமாக வந்தனர். அப்போது முதல்வர் எடப்பாடியுடன் வந்த ஓபிஎஸ் திடீரென ஒரு கட்டத்தில் சிரித்துக் கொண்டே முந்திக் கொண்டு ஓடினார்.

Today Jayalalitha's first death anniversary. OPS-EPS and other ADMK activists held silent rally. At that time, OPS overtakes Edappadi Palanisamy.

Recommended