பஞ்சாயத்து பண்ணுன லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு நேர்ந்த கதி- வீடியோ

  • 7 years ago
நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சொல்வதெல்லாம் உண்மை' எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். 'நெருங்கி வா முத்தமிடாதே...' 'அம்மணி', 'ஆரோகணம்' உள்ளிட்ட படங்களையும் இயக்கிய லட்சுமி ராமகிருஷ்ணன் கடந்த சில வருடங்களாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் இந்த நிகழ்ச்சியிலிருந்து நீக்கப்படுவதாக ஒரு வீடியோ நேற்று வெளியாகி இருக்கிறது. லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி மீது பலவிதமான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்ச்சியால் குடும்பங்களுக்குள் சிக்கல்கள் உருவாகின்றன எனப் பலரும் கூறி வருகிறார்கள். லட்சுமி ராமகிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியை நடத்தும்போது பேசியவை பல பயங்கர வைரல் ஆகியுள்ளன. 'என்னம்மா இப்படி பண்றீஙக்ளேமா...' 'போலீஸ கூப்டுவேன்...', 'உங்க புள்ளைய ரொம்ப நல்லா வளர்த்திருக்கீங்கம்மா...' போன்ற ட்ரெண்டான சில வசனங்கள் இதற்கு எடுத்துக்காட்டு. குடும்பத் தகராறை தீர்த்து வைக்கும் வகையில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளரான லட்சுமி ராமகிருஷ்ணன் திடீரென நீக்கப்பட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியின் 1500-வது எபிஸோடில் இது நடந்துள்ளது.


Actress and director Lakshmi Ramakrishnan presenting atelevision show titled 'solvadhellam unmai'. Lakshmi Ramakrishnan, the host of this event, to resolve the family dispute, was suddenly removed. Lakshmi Ramakrishnan is getting angry and coming out from shooting hall.

Recommended