நம்பிக்கையின் ஒளியாக திகழ்கிறார் ராகுல்காந்தி...ஸ்டாலின் வாழ்த்து!- வீடியோ

  • 7 years ago
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பிற்கு போட்டியிடுவதாக துணைத் தலைவர் ராகுல்காந்தி இன்று மனு தாக்கல் செய்துள்ளார். ராகுல்காந்தியை தலைவராக முன்மொழிவது நல்ல முடிவு என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்றோடு முடிகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டாலும், தேர்தல் முறைப்படி அறிவிக்க வேண்டும் என்பதால் அவர் இன்று காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தலைவர் பொறுப்பிற்கு ராகுல்காந்தி தவிர யாரும் மனு தாக்கல் செய்யாத நிலையில் அவர் இன்றே காங்கிரஸ் தலைவராக அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடைய தமிழக காங்கிரஸ் கமிட்டியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ராகுல்காந்திக்கு திமுக செயல்தலைவர் வாழ்த்து தெரிவிக்கும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் பேரியக்கத்தின் தனித்துவம் மிகுந்த பாரம்பரியத்தை யாராலும் மறுத்திட முடியாது. அந்த இயக்கத்தின் தற்போதைய வயது 132. காங்கிரஸ் நம்நாட்டின் பழம்பெரும் கட்சி.

அக்கட்சிக்கு தலைவரை தேர்ந்தெடுக்கும் தருணம் அக்கட்சிக்கு மட்டுமின்றி நமது தேசத்திற்கும் முக்கியமான கட்டமாகும். காங்கிரஸ் தலைவர் பொறுப்புக்கு ராகுல்காந்தி முன்மொழியப்படுவது வரலாற்றுடன் இணைந்த சிறப்பும் முக்கியத்துவமும் வாய்ந்ததாகும்.

இந்திய மக்களுக்காக தங்களை முழுவதுமாக அற்பணித்துக் கொள்ளும் அவர்களின் குடும்பத்தின் நீண்ட நெடிய வரலாற்றின் தொடர்ச்சியாக ராகுல் காந்தி இருக்கிறார். வகுப்புவாத மற்றும சர்வாதிகார எண்ணம் கொண்ட சக்திகள் நமது நாட்டை ஆக்கிரமிக்க முயற்சிக்கும் இந்த வேளையில் அவர் நம்பிக்கையின் ஒளியாகத் திகழ்கிறார்.




DMK working President Stalin's Video wish to Rahulgandhi for filing nomination for Congress president post, tweeted in the official page of Tamilnadu congress comitee

Recommended