ஆர்.கே.நகரில் மாறி மாறி... சரத்குமார் சொல்லும் காரணத்தை கேளுங்க!

  • 7 years ago
எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் போல சூழ்நிலைக்கு ஏற்றபடி, என்னால் மாற்றிக்கொள்ள முடியவில்லை என்று சரத்குமார் கூறியுள்ளார். ஒரே தொகுதியில் தொப்பிக்கும் இரட்டை இலைக்கும் மாறி மாறி பிரசாரம் செய்ய மனசாட்சி இடம் தரவில்லை என்று சரத்குமார் கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் சமத்துவ மக்கள் கட்சி ஆதரவு தராது என்று அறிவித்திருக்கிறார் சரத்குமார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்குமென்று அறிவிக்கப்பட்டது. மார்ச் 23ஆம் தேதியன்று சமத்துவ மக்கள் கட்சி சார்பில் அந்தோணி சேவியர் வேட்பாளராகக் களமிறங்கினார். அவர் வேட்புமனுத் தாக்கல் செய்யும்போது, அக்கட்சியின் தலைவர் நடிகர் சரத்குமாரும் உடனிருந்தார்.

போதிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் சமக வேட்பாளர் அந்தோணி சேவியரின் மனுவை தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்தது. அதோடு, சமக மாற்று வேட்பாளரின் வேட்புமனுவையும் நிராகரித்தது. இதன் பின்பு, அதிமுக அம்மா அணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தினகரனுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார் சரத்குமார்.

Sarath Kumar has decided not to contest inn RK Nagar by elevtion. He has some reasons for that.

Recommended