இந்த க்யூட் பப்பி சொல்லும் குஜராத் ஜோசியத்தை கேளுங்க!- வீடியோ

  • 7 years ago
குஜராத், ஹிமாச்சல் பிரதேசத்தில் பாஜக ஆட்சிஅமைக்கும் என்று வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்துகணிப்புகள் தெரிவித்துள்ள நிலையில், பாஜகவின் ஐடி விங் பொறுப்பாளர் அமித் மால்வியா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு க்யூட் பப்பியின் தேர்தல் கணிப்பு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்துள்ளன. டிசம்பர் 18ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் நேற்று மாலையில் பல்வேறு டிவி சேனல்கள் தேர்தலில் எந்த கட்சிக்கு வெற்றி என்ற கருத்துக்கணிப்புகளை வெளியிட்டன. பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் ஹிமாச்சல பிரதேசத்தில் பாஜக வெற்றி பெறும் என்றும், குஜராத் தேர்தலில் பாஜக 108 முதல் 111 இடங்கள் வரை பெற்று ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொள்ளும் என்று முடிவுகளை வெளியிட்டுள்ளன. இதனால் பாஜகவின் வெற்றி உறுதியான மகிழ்ச்சியில் உள்ளனர் அந்தக் கட்சியினர்.

இந்நிலையில் க்யூட் பப்பி ஒன்று குஜராத் தேர்தல் குறித்து ரியாக்ஷன் செய்யும் வீடியோவை பாஜகவின் ஐடி பிரிவின் பொறுப்பாளர் அஜித் மால்வியா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ஒரு பெண் கையில் வைத்திருக்கும் அந்த பப்பி குஜராத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள், மோடி வெற்றி பெறுவாரா என்று கேட்க இரண்டு கைகளையும் தூக்கி ஆட்டுகிறது அந்த பப்பி.

அடுத்ததாக காங்கிரஸ் கட்சி வெற்று பெறுமா ராகுல் காந்தி வருவாரா என்று கேட்க அதற்கு அமைதியாக இருக்கிறது பப்பி. மீண்டும் அந்த பப்பியிடம் டிசம்பர் 18 தேர்தல் முடிவு மோடிக்கு சாதகமாக இருக்குமா என்று கேட்டால் உற்சாகமாக கைகளை அசைத்து காட்டுகிறது.



A Puppy's election prediction of Gujarat goes viral in social media, as the puppy enthusiatically raising hands for Modi but no reply for Congress victory.