450 கோடி கொடு.. இல்லைனா கோர்ட்டுக்கு வா..பிசிசிஐயிடம் மல்லுக்கட்டும் பாகிஸ்தான்!- வீடியோ

  • 7 years ago
இந்தியா, பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டிகள் நடக்குமா என்பது குறித்து பல நாட்களாக விவாதம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு பின்பு நிறைய அரசியல் இருப்பதால் பல வருடங்களாக இருநாடுகளும் சுற்றுப்பயணங்களில் ஈடுபடாமல் இருந்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இதுகுறித்து முடிவு எடுக்கும்படி நேரடியாக பிசிசிஐயிடம் சண்டைக்கு சென்று இருக்கிறது. மேலும் பிசிசிஐ அமைப்பிடம் இழப்பீட்டு தொகையாக பணம் கேட்டு இருக்கிறது.
இழப்பீட்டு தொகையாக 450 கோடி பணம் கொடுக்கவில்லை என்றால் ஐசிசியிடம் முறையிடுவோம் என்றும் மிரட்டி வருகிறது.

2012 டிசம்பரில் தொடங்கி 2013 ஜனவரி வரை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகள் இந்தியாவில் நடைபெற்றது. அதுதான் இந்தியாவும் பாகிஸ்தானும் கடைசியாக தனியாக மோதிய தொடர். அதன்பின் இந்தியாவில் தனியாக தொடர் விளையாட பாகிஸ்தானும் வரவில்லை, இந்தியாவும் பாகிஸ்தான் செல்லவில்லை. உலகக் கோப்பை போட்டி, ஆசிய கோப்பை, டி-20 கோப்பை போன்ற தொடர்களில் மட்டுமே இந்தியா பாகிஸ்தானுடன் விளையாடியது. இருநாட்டு ரசிகர்களும் எப்போது முன்பு போல கிரிக்கெட் தொடர் நடக்கும் என்று காத்துக் கொண்டு உள்ளனர்.

Pakistan cricket board fights with BCCI on bilateral series. In this PCB asks 450 crore Indian as a compensation for not obeying the agreement.

Recommended