அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டிய காமராஜரின் கடைசி நாட்கள்....வீடியோ

  • 7 years ago
அது முன்னாள் முதலமைச்சர் அண்ணாத்துரை அவர்களின் கீழ் நடந்துக் கொண்டிருந்த தி.மு.க ஆட்சி. அப்போது பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் நாகர்கோவில் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்தார். அப்போதைய அமெரிக்க அதிபர் நிக்ஸன் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது கர்மவீரர் காமராஜர் அய்யா அவர்களை காண வேண்டியிருந்தார்
டெல்லியில் இருந்து காமாராஜர் அய்யாவை தொடர்புக் கொண்டு, செய்தியை கூறி எந்த நாள், நேரம் பார்க்க விருப்பம் என கேட்கிறார்கள். சற்றும் யோசிக்காமல் என்னால் நிக்ஸன் அவர்களை காண முடியாது என கூறிவிட்டார் காமராஜர். காமாராஜர் ஏன் இப்படி எடுத்தவுடன் பார்க்க முடியாது என கூறுகிறார் என அனைவருக்கும் பெரும் குழப்பம். பிறகு இதற்கான காரணத்தையும் அவரே கூறினார்.

அப்போதைய தமிழக முதல்வராக இருந்த அண்ணாதுரை அவர்கள் அமெரிக்கா சென்ற போது, அவரை காண நேரம் ஒதுக்கவில்லையாம் நிக்ஸன். வேறு கட்சிக் காரராக இருந்தாலும், தமிழன் என்ற ஒரே காரணத்தால், என் நாட்டவரை காண முடியாத நபரை நான் ஏன் காண வேண்டும் என தனது கண்டனத்தை வெளிபடுத்தியவர் காமாராஜர் அய்யா அவர்கள். தமிழ் உணர்வு மிக்க மாபெரும் தலைவர்.
நேருவும், காமாராஜர் அய்யாவும் ஒருமுறை விருதுநகர் வழியாக ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள காரில் சென்றுக் கொண்டிருந்தனர்.அப்போது, ஒரு வயதான மூதாட்டி பொதுமக்களோடு அந்த வேகாத வெயிலில் சாலை ஓரமாக நின்றுக் கொண்டு காரில் செல்பவர்களை பார்த்துக் கொண்டிருந்தார்.

Things To Learn From Karma Veerar Kamarajar!