மதுசூதனனை தோற்கடிக்க ஜெயக்குமாரே போதும்.. புகழேந்தி பொளேர்!- வீடியோ

  • 7 years ago
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் மதுசூதனனை தோற்கடிக்க ஜெயக்குமாரே போதும் என தினகரன் ஆதரவளாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். ஆர்கே நகர் தொகுதிக்கு வரும் டிசம்பர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேலைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருதுகணேஷ் சசிகலா அணியின் அதிமுக அம்மா அணி சார்பில் தினகரன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இதனால் ஆர்கே நகர் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில் தினகரனின் தீவிர ஆதரவாளரான புகழேந்தி சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கடந்த தேர்தலின் போது தினகரன் தொப்பி சின்னத்தில் ஜெயித்துவிடுவார் என்று தெரிந்துதான் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை ரத்து செய்ததாக குற்றம்சாட்டினார்.
அதனால் தற்போது மீண்டும் களமிறங்குவதாகவும் அவர் கூறினார். உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சட்டசபை உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் வெற்றிபெற்று மீண்டும் தங்களின் உறுப்பினர்கள் சட்டசபைக்கு செல்வார்கள் என்றும் அவர் கூறினார்.

எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி இன்னும் 20 நாட்கள் தான் இருக்கும் அதன்பிறகு இந்த ஆட்சி வீட்டுக்கு சென்றுவிடும் என்றும் அவர் கூறினார். மேலும் ஆர்கே நகர் தேர்தலில் போட்டியிடும் மதுசூதனனை ஜெயக்குமாரே தோற்கடித்து விடுவார் என்றும் புகழேந்தி தெரிவித்தார்.




Jayakumar will do the work to beat Madusoothanan in RK Nagar by poll said Dinakaran supporter Pugazhendi. He said there is fight between Jayakumar and madusoothanan he said.

Recommended