ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுகவுடன் தான் போட்டி- நாஞ்சில்சம்பத் பேட்டி- வீடியோ

  • 7 years ago
அதிமுக ஒரு பொருட்டல்ல ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுகவுடன் தான் தினகரனுக்கு நேரடி போட்டி என்று தினகரன் அணியைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தொகுதியில் 6 முனை போட்டி உருவாகியுள்ளது. இந்நிலையில் ஆர்கே நகர் இடைத்தேர்தல் குறித்து தினகரனின் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் தமிழ் ஒன் இந்தியாவிற்கு அளித்த பிரத்யேக பேட்டி விவரங்கள்:
டிடிவி தினகரன் ஆர்கேநகர் தொகுதி மக்களின் அன்பையும், ஆதரவைப் பெற்றுள்ளார். தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே இடைத்தேர்தலுக்கு தேர்தல் அறிக்கை தயாரித்தது கிடையாது. ஆனால் ஆர்.கே நகர் தொகுதிக்கென்று தனியான தேர்தல் அறிக்கையை தயாரித்து அதை வைத்து தான் மக்களிடம் வாக்குகளை சேகரித்தோம்.

அந்த தேர்தல் அறிக்கையில் இந்த தொகுதியில் இருக்கும் எல்லா தரப்பு மக்களின் கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன. ஆர் கே நகரில் 56 ஆயிரம் பேர் தங்களுக்கு வீடு கட்டித் தர வேண்டும் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிடம் மனு அளித்திருந்தனர். அதை கணக்கில் எடுத்துக் கொண்டு 56 ஆயிரம் பேருக்கும் வீடுகள் கட்டித் தரப்படும் என்று டிடிவி தினகரன் கடந்த ஏப்ரல் மாதம் தன்னுடைய தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.