குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவடங்களில் மிக கனமழை பெய்யும்..வீடியோ

  • 7 years ago
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாக தெரிவித்தார்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை கன்னியாகுமரி கடற்பகுதியில் நிலை கொண்டிருக்கும் என்றும் அவர் கூறினார்.

இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் என்றும் அவர் கூறியுள்ளார். கடலில் காற்றின் வேகம் அதிகம் இருக்கும் என்பதால் அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் எச்சரிக்கை விடுத்தார்.

Kanniyakumary, Nellai, Tuticorin districts will get very heavy rain said Chennai meteorological center. Chennai meteorological center warns fisherman to do not go sea.

Recommended