யாருக்கு வாக்களித்தால் என்ன நடக்கப் போகிறது... விரக்தியோடு சொல்லிவிட்டு போன விஜயகாந்த்!- வீடியோ

  • 7 years ago
மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்லும் முன்னர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆர்கே நகர் தேர்தலில் யாருக்கு வாக்களித்தால் என்ன என்று பேசி விட்டு சென்றுள்ளார். தே.மு.தி.க. நிறுவனத் தலைவரும் பொதுச் செயலாளருமான விஜயகாந்த் ஆண்டுக்கு ஒரு முறை சிங்கப்பூரில் மருத்துவ பரிசோதனை செய்து வருகிறார். இந்த ஆண்டுக்கான மருத்துவ சிகிச்சைக்காக அவர் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் 2 நாளாக டிவி பார்க்காததால் அது பற்றி தெரியவில்லை என்றார்.

ஆர்.கே நகர் தொகுதியில் மாலை 5 மணி முதல் 9 மணி வரை வாக்கு சேகரிக்கக் கூடாது என்பது குறித்து கருத்து தெரிவித்த அவர், காசு கொடுப்பவர்கள் கண்டனம் தெரிவிப்பார்கள், காசு கொடுக்க முடியவில்லை என்பதால் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்றார்.

DMDK chief Vijayakanth before boarding to Singapore told to press reporters at CChennai airport that DMDK is not contesting in RK Nagar by polls and no use to vote for anyone in the elections he added.

Recommended