காட்டெருமைகளை தடுக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை- வீடியோ

  • 7 years ago
சிம்ஸ் பூங்கா அருகே வனப்பகுதியை விட்டு காட்டெருமைகள் சுற்றிதிரிவதால் அவைகளை வனத்துறையினர் பிடித்து வனப்பகுதிக்குள் விடவேண்டும் என்று சுற்றுல்லா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊட்டியில் உள்ள முக்கிய சுற்றுல்லா ஸ்தலங்களில் ஒன்றாக திகழ்வது சிம்ஸ் பூங்கா. இப்பூங்காவில் பூத்துக்குளுங்கும் மலர்களை காண்பதற்காக தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுல்லா பயணிகள் வருகை தருகின்றனர். வார விடுமுறை நாட்களில் சுற்றுல்லா பயணிகளின் கூட்டம் சற்று அதிகமாகவே இருக்கும். கடந்த சில மாதங்களுக்கு முன் சுற்றுல்லாவிற்கு வந்த பெண் ஒருவரை காட்டெருமை தாக்கியதில் உயிரிழந்தார். அதையடுத்து காட்டு விலங்குகள் பூங்காவிற்குள் நுழையாமல் தடுக்க பூங்காவை சுற்றிலும் சுற்றுச்சுவர் எழுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் மீண்டும் காட்டெருமைகள் பூங்காவிற்குள் நுழைந்து சுற்றுல்லா பயணிகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளது. உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் காட்டெருமைகளை வனத்துறையினர் பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று சுற்றுல்லா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Des : Tourists are demanding that the forests get away from the forest and the forests are surrounded by forests near the Sims Park.

Recommended