சென்னையில் இன்று முதல் கனமழைக்கு வாய்ப்பு!..வீடியோ

  • 6 years ago
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் சென்னையில் இன்று முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. அக்டோபர் 20ஆம் தேதி தொடங்க வேண்டிய பருவமழை ஒரு வாரம் தாமதமாக தொடங்கியது.
தாமதமாக தொடங்கினாலும் சராசரியை விட அதிகளவு மழை பொழிவு இருக்கும் என கூறப்பட்டது. ஆனால் தொடக்கத்தில் கூறியதைப் போலவே அதிரடி காட்டிய பருவமழை பின்னர் ஓய்வெடுக்க தொடங்கியது.கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை ஓய்ந்துள்ளது. இந்நிலையில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்தது.

இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை இந்திய கடலோர பகுதியை நெருங்குவதாக தனியார் வானிலை மையம் தெரிவித்துள்ளது.


light rains are expected to begin over the city of Chennai by today that is November 25. Thereafter, between November 26 and 28, rainfall activity will increase even further. During this period, moderate spells of rainfall are expected to occur over Chennai and its adjoining areas said shymet weather.

Recommended