ஆந்திர எம்.எல்.ஏ.க்கள் செய்த வேலையை பாருங்கள்- வீடியோ

  • 7 years ago
ஆந்திர சட்டசபை நடைபெற்று வரும் நிலையில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க செல்வதற்காக தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 100 எம்எல்ஏக்களுக்கு ஒரே நேரத்தில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆந்திர சட்டசபை நடைபெற்று வரும் நிலையில் ஆந்திரபிரதேசத்தின் ஆளும் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த 100 எம்எல்ஏக்கள் சபாநாயகர் கொடெல்லா சிவபிராசாத் ராவிற்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் வார விடுமுறையோடு சேர்த்து கூடுதலாக இரண்டு நாட்களுக்கு விடுமுறை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஆந்திராவில் அடுத்த சில தினங்களுக்கு சுமார் 1.2 லட்சம் திருமணங்கள் நடைபெற உள்ளன. இதனை காரணமாக வைத்துத் தான் எம்எல்ஏக்கள் விடுமுறை கேட்டுள்ளனர். திருமண சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டியுள்ளதால் 2 நாட்கள் சட்டசபை நடவடிக்கைகளில் பங்கேற்க முடியாது என்றும் விடுமுறை கேட்டும் அவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கிய ஆந்திர சட்டசபை 30ம் தேதியுடன் முடிவடைகிறது. மூன்றாவது வாரமாக சட்டசபை நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் மாஸ் விடுமுறை கேட்டுள்ளனர்

Andhra assembly speaker granted mass leave to 100 MLAs of ruling party as the assembly session is going on The reason for MLAs leave is they were going to attend marriages.

Recommended