மக்கள் பேருந்து கிடைக்காமல் அல்லல்படும் பொழுது சொகுசு பேருந்தில் சென்ற எம்.எல்.ஏ.க்கள்- வீடியோ

  • 6 years ago
தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்களின் தொடர் வேலைநிறுத்தத்தால் மக்கள் அன்றாட போக்குவரத்துக்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சட்டசபைக்கு வரும் எம்எல்ஏக்களுக்கு மட்டும் சொகுசு பேருந்துகள் இயக்கப்பட்டன. ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து 6வது நாளாக போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் நீடிப்பதால் மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். முதல் 2 நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், பணிச்சுமை காரணமாக அவர்களும் பெரிய அளவில் விருப்பம் காட்டவில்லை என்று தெரிகிறது. இதனால் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்படுவதால் பள்ளி மாணவர்கள் சரியான நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.

இதே போன்று அலுவலகம் செல்லும் பொதுமக்களும் பேருந்துகள் குறைந்த அளவே இயக்கப்படுவதால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றன. வழக்கத்தை விட அதிக பணம் செலவு செய்து ஆட்டோ, ஷேர் ஆட்டோ உள்ளிட்டவற்றில் கூட்ட நெரிசலுடன் மக்கள் பயணித்து வருகின்றனர்.

People were suffering more due to continuous 6th day tranpsort union strike, whereas special buses arranged for MLAS to attend assembly session

Recommended