ஆர்கே நகர் தேர்தல்: அரங்கேற போகும் வரலாறு காணாத முறைகேடுகள்!- வீடியோ

  • 6 years ago
ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலை டிசம்பர் 31-க்குள் முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இத்தேர்தலானது களம் காணுகிற கட்சிகளுக்கு வாழ்வா? சாவா? என்பதால் வரலாறு காணாத அத்தனை முறைகேடுகளும் அரங்கேறுகிற பேராபத்தும் இருக்கிறது. ஜெயலலிதா மறைந்து ஓராண்டாகிவிட்டது. இன்னமும் அவரது ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் நடத்தப்படவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் இடைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட போது அங்கிங்கெனாதபடி திசையெங்கும் முறைகேடுகள், பணப்பட்டுவாடாதான்...

இதன் உச்சமாகத்தான் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்பட்ட தேர்தலே நிறுத்தப்பட்டது.
இப்போது களமும் காட்சிகளும் மாறிவிட்டன. அதிமுகவின் அதிகாரப்பூர்வ இரட்டை இலை சின்னம் தொடர்பான தீர்ப்பு ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிக்கு கிடைக்கலாம்; இந்த தீர்ப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்கிற நிலைமை இருக்கிறது. அப்படி இரட்டை இலை கிடைத்தால் ஜெயலலிதா ஜெயித்த தொகுதியில் வென்றே தீர வேண்டிய நெருக்கடி ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிக்கு இருக்கிறது.

The Madras High Court on Tuesday stated that by-polls to the RK Nagar constituency should be held before December 31. All Political parites are ready to face the by Poll elections.

Recommended