நமது எம்ஜிஆர் , ஜெயா டிவி - முரசொலி, கலைஞர் டிவியா மாறிடுச்சு...வீடியோ

  • 7 years ago
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு நமது எம்ஜிஆர் நாளிதழ் முரசொலியாகவும், ஜெயா டிவி கலைஞர் டிவியாகவும் மாறிவிட்டதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் நாளிதழ் சசிகலா புகழ் பாடத் தொடங்கின. அவ்வபோது அரசு குறித்த செய்திகளும் வந்து கொண்டிருந்தன. ஆனால் சசிகலா சிறை சென்ற பின்னர் முதல்வர் பழனிசாமி கட்டுப்பாட்டிற்குள் அனைத்தும் செல்லத் தொடங்கியதில் இதில் இந்த நிலைப்பாட்டில் மாற்றம் வந்தது. முதல்வர் பழனிசாமியை ஒரு பிரேம், இரண்டு பிரேமில் காட்டி வந்தவர்கள், பின்னர் பழனிசாமி முழுவதும் சசிகலா எதிர்ப்பு அணியாக மாறியதும் அனைத்துக்குமே இருட்டடிப்பு தான். அதிலும் அரசுக்கு எதிரான செய்தி, பாஜகவை விமர்சிக்கும் கட்டுரை, கவிதை என்று ஜெயா டிவியும், நமது எம்ஜிஆர் நாளிதழும் பரிணாம வளர்ச்சி பெற்றது.

இதில் உச்சகட்டமாக கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு திமுக சீனியர் தலைவர் துரைமுருகனின் பேட்டியை ஜெயா டிவி அரை மணி நேர நேரலையாக ஒளிபரப்பியது. இது அதிமுக மட்டுமல்ல திமுகவினரையும் ஆச்சரியப்பட வைத்தது.

Tamilnadu fisheries development department minister Jayakumar says that Jaya TV and Namadhu MGR turned its colour from twoleaves to Sun.

Recommended