சோதனையில் லேப்டாப், பென்டிரைவ்கள் சிக்கியது- வீடியோ

  • 7 years ago
சோதனையில் லேப்டாப், பென்டிரைவ்கள் சிக்கியது .

முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் இருந்து லேப்டாப் , பென்டிரைவ், சிடிக்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

மறைந்த முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வீடான வேதா இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று இரவு திடீரென சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் இருந்து ஜெயலலிதா பயன்படுத்திய லேப்டாப் மற்றும் பென்டிரைவ்களை அதிகாரிகள் கைப்பற்றினர். ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றனின் அறையிலும் அதிகாரிகள் இஞ் பை இஞ்சாக சோதனை நடத்தினர். அப்போது முக்கிய ஆவணங்கள் மற்றும் சிடிக்கள் அதிகாரிகளின் கையில் சிக்கியுள்ளன.


Dis : Income tax officials have seized laptop, pendrive, and CDs from former Prime Minister Jayalalithaa's Veta House

Recommended