சிக்கியது சிடி டென்சனில் சசிகலா- வீடியோ

  • 7 years ago
சசிகலாவின் உறவினர்கள் வீடுகளில் நடைபெற்ற வருமான வரி சோதனையின் போது மன்னார்குடியில் திவாகரனின் வீட்டில் இருந்து சிடி ஒன்றை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். அந்த சிடிக்களில் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது எடுக்கப்பட்டவையா என்று அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரம் வருமான வரித்துறை அதிகாரிகள் தமிழகத்தில் சசிகலாவின் உறவினர்கள் நண்பர்கள் வீடு அலுவலங்கள் மற்றும் ஜெயாடிவி நமது எம்ஜிஆர் நாளேடு மன்னார்குடியில் சசிகலாவின் உறவினர் திவாகரனின் வீடு உள்ளிட்ட 190க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் கணக்கில் காட்டப்படாத நகைகள் பணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். சசிகலாவின் உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மன்னார்குடியில் திவாகரனின் வீட்டில் இருந்து சிடி ஒன்றையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். அந்த சிடியில் மறைந்த முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிகிச்சை குறித்த காட்சிகள் பதிவாகியுள்ளதா என்றும் சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. வருமான வரித்துறை அதிகாரிகள் கையில் சிக்கியுள்ள சிடியால் மன்னார்குடி குடும்பத்தினர் பீதியில் உறைந்துள்ளனர். சிடி சிக்கியுள்ளது குறித்து பெங்களுரு சிறையில் உள்ள சசிகலாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட பயங்கரமான டென்சன் அடைந்துள்ளாராம்.

Dis : Sasikala's relatives Income Tax Inspection at Residential Houses Income Tax Department has seized CD from Dwarkaran's house in Mannargur. The authorities have been investigating whether such cases were taken when Jayalalithaa was admitted to the hospital.