வாடிக்கையாளர்களிடம் ரூ. 75 கோடி மோசடி செய்த தமிழகத்தின் பிரபல ஜூவல்லரி!- வீடியோ

  • 6 years ago
நகைச் சீட்டுகள் மூலம் சுமார் ரூ.75 கோடி அளவுக்கு மோசடி செய்திருப்பதை தமிழகத்தின் பிரபல நகைக் கடை உரிமையாளர்கள் ஒப்புக் கெண்டாக ஆங்கில ஊடகம் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது. சென்னை, ஓசூர் உள்ளிட்ட 7 இடங்களில் இயங்கி வந்தது அந்த பிரபல நான்கு எழுத்து நகைக் கடை. 1990களில் டிவி சேனல்களில் இந்த நகைக்கடை விளம்பரம்தான் திரும்ப திரும்ப காட்டப்பட்டது. ஆனால், இங்கு நகைச் சீட்டுக் கட்டியவர்களுக்கு நகையை கொடுக்காமல் அலைக்கழிக்க ஆரம்பித்தது நகைககடை. பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை

சுமார் ஆயிரம் வாடிக்கையாளர்கள் காவல் நிலையத்தில் வரிசையாக புகார்களை அளித்தனர். இதையடுத்து திடீரென கடந்த மாதம் நகைக் கடைகள் மூடப்பட்டன. சட்டம்-1997ன் கீழ், 406, 420 உள்ளிட்ட பிரிவுகளில், அந்த நகைக் கடை உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கை விசாரித்தனர்.

Once a trusted brand of jewellers, has acknowledged to police that it owed Rs 75 crore to more than 21,000 people who had paid monthly instalments under various schemes

Recommended