சொகுசு கார் மோசடி... சசிகலா கணவர் நடராஜனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை உறுதி-வீடியோ

  • 6 years ago
வெளிநாட்டில் இருந்து சொகுசு கார் இறக்குமதி செய்ததில் வரி ஏய்ப்பு செய்த வழக்கில் சசிகலா கணவர் நடராஜன், தினகரன் தம்பி பாஸ் என்கிற பாஸ்கரனுக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த 2 ஆண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
1994-ம் ஆண்டு லண்டனில் இருந்து லெக்ஸஸ் சொகுசு காரை நடராஜன் இறக்குமதி செய்தார். புதிய காரை இறக்குமதி செய்ததற்காக ரூ1.6 கோடி வரி செலுத்த வேண்டும். ஆனால் புதிய காரை 1993-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட பழைய கார் என கூறி நடராஜன் வரி ஏய்ப்பு செய்தார். இது தொடர்பான வழக்கு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இவ்வழக்கில் 2010-ம் ஆண்டு சசிகலா கணவர் நடராஜன், தினகரனின் தம்பி ஜெஜெ டிவி பாஸ் என்கிற பாஸ்கரன், லண்டனைச் சேர்ந்த யோகேஷ் பாலகிருஷ்ணன், இந்தியன் வங்கி மேலாளர் சுஜாரிதா ஆகியோருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது சிறப்பு நீதிமன்றம்.

The Madras High Court today upheld a Special court order convicting Sasikala's Husband Natarajan in Luxury car import case

Recommended