தண்ணியை போட்டு தகராறு செய்த கருணாஸ் நண்பர்கள் - கொலை முயற்சி வழக்கு- வீடியோ

  • 6 years ago
சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டல் பாரில் எம்.எல்.ஏ.வும்., நடிகருமான கருணாஸ் நண்பர்கள் தொழிலதிபர் ஒருவருடன் அடிதடி தகராறில் ஈடுபட்டு அவரை சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. தொழில் அதிபர் மீது தாக்குதல் நடத்திய கருணாசின் ஆதரவாளரை போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு போடப்பட்டுள்ளன.

சென்னை எம்.ஆர்.சி. நகரில் சாமர்செட் ஸ்டார் ஹோட்டல் உள்ளது. இங்கு உள்ள பாருக்கு மிகபிரபலமானவர்களும், தொழிலதிபர்களும் வருவது வாடிக்கை. கடந்த சனிக்கிழமை கருணாஸ் மற்றும் அவரது கட்சி நிர்வாகியான டிஃபெண்டர் தாமோதர கிருஷ்ணன் உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.
கருணாஸ் தனது நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்த போது அங்கு வந்து தொழிலதிபரான பரணீஸ்வரன் என்பவர் அறிமுகமானதாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த கருணாசின் நண்பர் அஜய் என்பவருக்கும் பரணீஸ்வருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

CCTV footage of the fight between MLA Karunas friends and a businessman at a bar in MRC Nagar Star hotel in Chennai

Recommended