சாதனைக்கு காத்திருக்கும் கோஹ்லி... வரலாறு படைக்க போகும் அஸ்வின்..வீடியோ

  • 7 years ago
கொல்கத்தாவில் நடக்கும் இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடக்க இருக்கிறது. இந்த போட்டி இன்று நடக்க இருக்கிறது. இதுவரை கிரிக்கெட் உலகில் செய்யாத பல சாதனைகளை இன்றைய போட்டியில் வீரர்கள் செய்ய முடியும்.
அணியில் மீண்டும் திரும்பி இருக்கும் அஸ்வின் தொடங்கி கோஹ்லி வரை புதிய வரலாறு படைக்க வரிசைகட்டி காத்துக் கொண்டு இருக்கின்றனர். இந்திய அணிக்கு மட்டும் இல்லாமல் இலங்கை அணிக்கும் இது முக்கியமான போட்டியாகும். சரியாக சொல்ல வேண்டும் என்றால் இது இலங்கை அணியின் கனவு டெஸ்ட் தொடர்

இலங்கை இந்திய மண்ணில் விளையாடும் இந்த டெஸ்ட் போட்டி சரியாக ஏழு வருடத்திற்கு பின் நடக்கிறது. இதற்கு முன் 2009 டிசம்பரில் நடந்த டெஸ்ட் போட்டிதான் இந்தியா இலங்கை மோதியா கடைசி டெஸ்ட் போட்டி. அதன் பிறகு இந்திய மண்ணில் இலங்கைக்கு எதிராக எந்த டெஸ்ட் போட்டியும் நடக்கவில்லை. மேலும் இந்த போட்டியில் ஆடும் இலங்கையின் 'ஏஞ்சலோ மேத்தியூஸ், மற்றும் 'ரங்கனா ஹெராத்' ஆகியோர் மட்டுமே இந்தியாவில் டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ளனர்.

First test match between India vs Srilanka held today in Kolkatta. There are lot of interesting facts in this first test match

Recommended