சுரேஷ் ரெய்னாவை இழக்க போகும் சென்னை அணி- வீடியோ

  • 7 years ago
2018 ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் இருந்து சுரேஷ் ரெய்னாவை விட்டுவிட சென்னை அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடர் கடந்த 2008 முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மீது சூதாட்டப் புகார் சிலப்பட்டுச்சு அதனை தொடர்ந்து நடந்த விசாரணையில் அந்த இரு அணிகளும் 2 வருடம் ஐபிஎல் தொடர்களில் விளையாட உச்சநீதி மன்றம் தடை விதித்தது. அந்த தடை இந்த ஆண்டுடன் நிறைவடைய உள்ள நிலையில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் வரும் 2018 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு தங்களை தயார்படுத்திக்கொண்டு வருகின்றன.

இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக சோர்ந்திருந்த ரசிகர்கள் தற்போது முன் எப்போதும் இல்லாத அளவு குஷியாகியுள்ளனர். இந்நிலையில் இரு அணிகள் தொடருக்கு திரும்புவதால், ஒவ்வொரு அணியிலும் இரண்டு உள்நாட்டு வீரர்கள், 1 வெளிநாட்டு வீரர் என மூன்று வீரர்களை தவிர, மற்ற எல்லா வீரர்களையும் ஏலத்தில் விட பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

three players chennai super kings should retain ahead of ipl 11 players’ auction