இறுதி போட்டிக்கு முன்னேறுமா சென்னை அணி- வீடியோ

  • 6 years ago
ஐ.எஸ்.எல். என்று அழைக்கப்படும் இந்திய சூப்பர் ‘லீக்’ கால்பந்து போட்டி கடந்த நவம்பர் 1-ந்தேதி தொடங்கியது.

சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் நடந்த இந்தப்போட்டியில் 10 அணிகள் பங்கேற்றன.

கடந்த 4-ந்தேதியுடன் 90 ‘லீக்’ ஆட்டங்கள் முடிவடைந்தன. இதன் மூலம் பெங்களூர் எப்.சி., சென்னையின் எப்.சி, கோவா, புனே ஆகிய அணிகள் முதல் 4 இடங்களை பிடித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.

ஜாம்ஷெட்பூர், கேரளா பிளாஸ்டர்ஸ், மும்பை சிட்டி, டெல்லி டைனமோஸ், அட்லெடிகோ கொல்கத்தா, நார்த் ஈஸ்ட் யுனைடட் (கவுகாத்தி) ஆகிய அணிகள் முறையே 5 முதல் 10 இடங்களை பிடித்து போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டன.

isl chennai vs goa 2nd semi final match held on tomorrow at chennai

Recommended