நடிகை தன்ஷிகா பரபரப்பு பேச்சு!- வீடியோ

  • 7 years ago
கிருஷ்ணா, விதார்த், தன்ஷிகா நடிப்பில் எழுத்தாளர் மீரா கதிரவன் இயக்கிய 'விழித்திரு' படம் பல சிக்கல்களுக்கிடையே சமீபத்தில் வெளிவந்தது. விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றாலும், தியேட்டர்கள் அதிகம் கிடைக்காததால் படம் சரியாகப் போகவில்லை. ரசிகர்களால் கவனிக்கப்படுவதற்கு முன்பே சில தியேட்டர்களில் எடுக்கப்பட்டும் விட்டது. இந்நிலையில், 'விழித்திரு' படம் பற்றிய திறனாய்வுக் கூட்டம் மைலாப்பூர் கவிக்கோ மன்றத்தில் நடந்துது. இதில் படத்தின் நாயகி தன்ஷிகா கலந்து கொண்டு பேசினார்.

சமுதயாத்தில் உள்ள அனைவருக்கும் சமூக உணர்வு உண்டு. அந்த சமூக உணர்வு எனக்கும் உண்டு. ஒரு படத்தின் வெற்றியில் கலந்து கொள்வதைவிட வேதனையில் கலந்து கொள்வதையே பெருமையாக நினைக்கிறேன். என் மனது பாரமாக இருக்கிறது. என்னால் பேசக்கூட முடியவில்லை. ஒரு இயக்குனரின் ஐந்து வருடப் போராட்டம் இந்தப் படம்.

இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டதற்கு நன்றி சொன்னார்கள். திரைப்படத்தின் விழாக்களில் கலந்து கொள்வது நடிகர், நடிகைகளின் கடமை. அப்படி கலந்து கொள்ளும்போதுதான் தயாரிப்பாளர்களின் கஷ்டம் தெரியும். நான் வெற்றியை விட தோல்வியை அதிகம் பார்த்தவள். ஆனால் இரண்டையும் சமமாகப் பார்க்க பழகிக் கொண்டேன்.


'Vizhithiru' film directed by Meera Kathiravan has recently come out of many issues andand the film is not going well because theaters are not available . Dhansika, heroine of this film talked about 'Vizhithiru'.

Recommended