திருமணமேடை வரை வந்து விட்டேன்.. இதயம் படபடவென துடித்தது.. மனதில் பல எண்ணங்கள், இந்த நிமிடம் துணிந்து திருமணத்தை நிறுத்திவிட்டால், என் வாழ்க்கையில் நான் ஒரு மிகச்சிறந்த காதல் பொக்கிஷத்தை அடைந்து விடுவேன் என்று தோன்றியது.. வீட்டை பற்றியும் நினைக்க வேண்டியிருந்தது.. ஒரு திருமணத்தை பிரச்சனை இன்றி ஏற்பாடு செய்வது ஒன்றும் அவ்வளவு சாதாரணமான காரியம் என்று தோன்றியது.. விஷ்ணுவை போல ஒருவனை இழக்க மனமில்லை.. என் மனதில் பல குழப்பங்கள்.. இந்த காதல் திருமணத்திற்கு ஒருநாள் முன்னால் தான் வருனுமா? இப்போ நான் என்ன செய்ய... என்று மனம் பதறியது..விஷ்ணுவும் திருமணத்திற்கு வந்துவிட்டான்... அவனை பார்க்கவே எனக்கு சங்கடமாக இருந்தது.. எனது திருமணத்தை பற்றி அவனிடம் நான் வாய் திறக்கவே இல்லை.. என் மீது தவறில்லை.. உன்னை ஏமாற்ற நினைக்கவில்லை என்று கூற துடித்தேன்.. அவனை ஓடி சென்று கட்டி அணைத்துக் கொள்ள வேண்டும்.. அவனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று துடித்தேன்.. எழுந்திரு.. எழுந்திரு என்று மனம் கூறியது.. கால்கள் துடித்தது.. என் அம்மாவை கண்டேன்.. தன் மகளுக்கு திருமணமாக போகிறது என்று சந்தோஷமாக இருந்தார்... நம் ஒருவருடைய சந்தோஷத்திற்காக அனைவரையும் அழுக வைக்க வேண்டுமா என்று தோன்றியது.. நானே சென்று என்னை திருமணம் செய்து கொள் என்றாலும், அவன் இந்த சூழலில் சரி என்று கூற மாட்டான். அவனுக்கு அனைவரையும் காயப்படுத்தும் மனம் கிடையாது... வீட்டில் பார்த்தவரையே திருமணம் செய்து கொண்டேன்....!