அடப்பாவமே, நியூசி. கிரிக்கெட் வீரருக்கும் ஆதார் கார்டு அவசியமா?- வீடியோ

  • 7 years ago
இந்தியாவில் கிரிக்கெட் விளையாடுவதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது நியூசிலாந்து கிரிக்கெட் அணி. மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரை அந்த அணி இந்தியாவிற்கு எதிராக விளையாடி வருகின்றது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நியூசிலாந்து அணி வீரர் ரோஸ் டெய்லருக்கும், சேவாக்கிற்கும் டிவிட்டரில் நிறைய விவாதம் நடந்து வருகிறது. அவற்றில் பெரும்பாலான விவாதம் அவர் பெயர் குறித்தே இருக்கிறது. தற்போது ரோஸ் டெய்லருக்கு ஆதார் கார்ட் வழங்கும்படி சேவாக் ஆதார் அமைப்பிடம் காமெடியாக கோரிக்கை விடுத்து இருக்கிறார். அவரின் அந்த டிவிட்டுக்கும் ஆதார் அமைப்பு சீரியஸாக பதிலும் கூறியிருக்கிறது.

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்தின் ரோஸ் டெய்லர் மிகவும் சிறப்பாக ஆடினார். இந்த போட்டியில் அவர் 100 பந்துகளில் 95 ரன்கள் அடித்தார். அப்போது இந்திய வீரர் சேவாக் அவரை பாராட்டி டிவிட் செய்து இருந்தார்.

New Zealand is playing three ODI and three T-20 match series vs India. A week ago New Zealand player Ross Taylor seeking Shewag's help to pronoun his own name which has misspelled in hotel board. Now Sehwag seeks Aadhar card for Ross Taylor.

Recommended