கமலுக்கு ஆதரவாக பேசிய திருமாவளவன்- வீடியோ

  • 7 years ago
நடிகர் கமலஹாசன் தமிழகத்தில் இந்து தீவிரவாதிகள் அதிகரித்து வருவதாக கூறியுள்ள வெளிப்படையான கருத்தை விடுதலை சிறுத்தை கட்சி வரவேற்பதாக திருமாவளவன் தெரிவித்தார்.

கரூரில் நடந்த சிலதினங்களுக்கு முன் பாஜகவின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது பாஜகவினருக்கும் விடுதலை சிறுத்தை கட்சி தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதிலும் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்பாட்டம் நடத்தினர். கரூரில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழகத்தில் நடப்பது அதிமுக ஆட்சி இல்லை என்றும் பாஜகவின் ஆட்சி தான் நடைபெருவதாக கூறினார். மேலும் நடிகர் கமலஹாசன் தமிழகத்தில் இந்து தீவிரவாதிகள் அதிகரித்து வருவதாக கூறியுள்ள வெளிப்படையான கருத்தை வரவேற்பதாக கூறினார்.

Dis : Thirumavalavan said that the party was welcomed by the Sri Lankan party to express the openness of Hindu extremists in Tamil Nadu.

Recommended