கடந்த 15ம் தேதி தொடங்கிய உங்களுடன் ஸ்டாலின் முகாம் திட்டம்தான் இப்போ தமிழ்நாட்டில் ஹாட் டாப்பிக். தமிழ்நாடு முழுக்க 10000 முகாம்கள் அமைத்து, பல அரசு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மக்களுக்கு நேரடியாக சேவைகளை வழங்க களமிறக்கப்பட்டு இருக்காங்க. நகா்ப்புறப் பகுதிகளில் 13 அரசுத் துறைகளின் 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 அரசுத் துறைகளின் 46 சேவைகளும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. மகளிர் உரிமை தொகைக்கும் இங்கேயே விண்ணப்பம் செய்யலாம். https://ungaludanstalin.tn.gov.in/ பக்கத்தில் முகாம் நடக்கும் இடங்களை அறிந்துகொள்ள முடியும்.
Ungaludan Stalin Scheme becomes a game changer for Tamil Nadu people as it simplifies and brings all government-related works under one roof, including Magalir Urimai Thogai.