இந்தியன் ஆயில் ஊழியர்கள் பணி நீக்கம்; ஆட்சியரிடம் மனு!

  • 2 years ago
திருச்சி மாவட்டம் இனாம் குளத்தூரில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் கியாஸ் நிரப்பும் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். பல்வேறு சங்கங்கள் உள்ளது. இந்நிலையில் இந்த மையத்தில் பாரதிய பொது தொழிலாளர் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் இணைந்துள்ள முப்பத்தி ஏழு ஊழியர்களை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுவிடம் துணைச் செயலாளர் கணேசன் தலைமையில் மனு அளித்தனர்.

Recommended