#karurboomi #தமிழக அளவில் மாணவர்களிடையே ஏற்படும் கலாச்சார சீர்கேடு தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் |
  • 2 years ago
#karurboomi #newsonly #boominews #கரூர் டிஎன்பிஎல் ஒப்பந்த பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் மற்றும் தமிழக அளவில், மாணவர்களிடையே ஏற்படும் கலாச்சார சீர்கேட்டை சரி செய்ய வேண்டும் -தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்.

கரூர், வேலாயுதம்பாளையத்தில் நேற்று மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு டிஎன்பிஎல் ஆலையில் வேலை செய்துவரும் ரோல் மற்றும் நாட்ஆன் ரோல் பணியாளர்களை பணி நிரந்தரம், உரிய ஊதியத்தைக் கொடுக்க வேண்டும் என்று தேமுதிக சார்பில் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்ட கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மே 2 இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார் தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் அப்போது அவர் கூறுகையில்: கரூர் டிஎன்பிஎல் இன் அதிகமான ஊழல்கள் நடைபெற்று வருகிறது இதனை கண்காணிக்க ஐஏஎஸ் குழு ஒன்றை நியமிக்க வேண்டும் எனவும் திமுக ஆட்சிக்கு வந்தால் மட்டும் அறிவிக்கப்படாத மின்வெட்டு தமிழகம் முழுவதும் ஏற்படுகிறது. சென்னையில் எங்கள் வீட்டில் கூட மின்வெட்டு ஏற்பட்டுகிறது எனவும், மாணவர்களிடையே ஏற்படும் கலாச்சார சீர்கேட்டை முடிவுக்குக் கொண்டுவர மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் மது போன்ற போதை வஸ்துகளை விற்பனை செய்வதை கடுமையாக தடுக்க வேண்டும், பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக பொதுமக்களின் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு பல மடங்கு உயர்ந்துள்ளதாகவும் மத்திய மாநில அரசுகள் உடனடியாக பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும். மேலும் திமுக மற்றும் அதிமுக ஆட்சியில் மின்சார மற்றும் போக்குவரத்துத் துறையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும், போக்குவரத்து துறையில் 30% தரமற்றதாக உள்ளது எனவும் கூறினார். மேலும் இலங்கையில் ஏற்படும் பொருளாதார சூழ்நிலையை பற்றி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு தேமுதிக என்றுமே இலங்கைத் தமிழர்கள் நலனில் மிகுந்த அக்கறை உண்டு எனவே அவர்களுக்கு முழு ஆதரவு அளிக்கும் எனவும் கூறினார். இதனைத் தொடர்ந்து ஆளுநருக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையே ஏற்படும் அதிகாரம் மோதல்களால் வாக்களித்த பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர் எனவே ஆளுநர் மற்றும் மாநில அரசின் அரசியலை கைவிட வேண்டும் பொது மக்களுக்காக செயல்பட வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.
Recommended