#karurboomi #நாதஸ்வர தவில் கலைஞர்கள் முன்னேற்ற சங்கம் முதலாம் ஆண்டு விழாவில் முதல்வருக்கு கோரிக்கை |

  • 2 years ago
#karurboomi #newsonly #boominews #கரூரில் தமிழ்நாடு அனைத்து நாதஸ்வர தவில் கலைஞர்கள் முன்னேற்ற சங்கம் நடத்தும் முதலாமாண்டு இசைவிழா நடைபெற்றது.

கரூரில் தமிழ்நாடு அனைத்து நாதஸ்வர தவில் கலைஞர்கள் முன்னேற்ற சங்கம் நடத்தும் முதலாமாண்டு இசைவிழா மற்றும் முதலாம் ஆண்டு விழா, கரூர் ஐயப்பா சேவா சங்க மண்டபத்தில் காலை 9 மணி அளவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குனர், சுந்தர், தமிழ்நாடு அனைத்து நாதஸ்வர தவில் கலைஞர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் சிவா, தமிழ்நாடு அனைத்து நாதஸ்வர தவில் கலைஞர் முன்னேற்ற சங்க நிறுவனர் மற்றும் மாநில தலைவர் பத்மநாபன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். கரூர் மாவட்ட தலைவர் சிவகுமார் தலைவர், துணைத் தலைவர் முருகானந்தம் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில் பத்திரிகையாளர்களை சந்தித்த தமிழ்நாடு அனைத்து நாதஸ்வர தவில் கலைஞர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் பத்மநாபன் கூறுகையில்:, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நாதஸ்வர, தவில் கலைஞர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் முறையிட்டு பல்வேறு நலத்திட்டங்கள், கோரிக்கைகளை கேட்டு பெற்றுத்தர அனைத்துவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என உறுதியளித்தார். முன்னதாக கரூர் மாவட்ட நாதஸ்வரம் மற்றும் தவில் கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Recommended