விடுதலை செஞ்சுட்டாங்க; ஹேப்பியான மீனவர்கள்; ஆனந்தத்தில் உறவினர்கள்!

  • 2 years ago
தொண்டியை அடுத்த நம்புதாளையைச் சேர்ந்த மீனவர்கள் 6 பேர் நாட்டு படகு ஒன்றில் கச்சத்தீவு அருகே கடந்த பிப்ரவரி 18-ம் தேதி மீன்பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக் கூறி அந்த 6 மீனவர்களை கைது செய்து, அவர்கள் சென்ற படகையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது. அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இலங்கை சிறையிலிருந்து நம்புதாளை மீனவர்கள் 6 பேரும் விடுவிக்கப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட 6 மீனவர்களில் 2 மீனவர்களுக்கு கொரோனா பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ள நிலையில் முத்துக்குமார், கம்மாக்கரை, மனோஜ்குமார், ரகுபதி ஆகிய 4 மீனவர்கள் மட்டும் தமிழகம் வந்துள்ளனர். இதேபோல், ராமேசுவரம் மீனவர்கள் 8 பேர் கடந்த 26-2-2022 அன்று இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த நிலையில், அவர்களும் விடுதலை செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து நம்புதாளை மீனவர்கள் 4 பேர், ராமேசுவரம் மீனவர்கள் 8 பேர் என மொத்தம் 12 மீனவர்கள் நேற்று மாலை 4 மணியளவில் திருவாடானை தாலுகா அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.