கர்நாடகா உயர்நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் கரூரில் ஆர்ப்பாட்டம்

  • 2 years ago
கர்நாடகா உயர்நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் கரூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கர்நாடகா உயர்நீதிமன்றத்தால் அநீதியாக வழங்கப்பட்ட தீர்ப்பை கண்டித்து கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்புறம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கரூர் கிளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த அமைப்பின் கிளை தலைவர் முஹம்மது ஹசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட இஸ்லாமிய ஆண்களும், பெண்களும் கர்நாடகா உயர்நீதிமன்றத்தை கண்டித்தும், கர்நாடகா அரசையும் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். அதனைத் தொடர்ந்து முகமது யூசப் - மாநிலச் செயலாளர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இஸ்லாமியர் அணிந்து வரும் ஹிஜாய் பெண்கள் அணிந்து வருவது தொடர்பாக தீர்ப்பு வழங்கப்பட்டது அதில் இஸ்லாமியர்கள் அணியக்கூடிய ஹிஜாய் என்பது அவர்களின் மதத்தில் சொல்லப்பட்ட கடமை இல்லை அவர்கள் வேதத்தில் சொல்லப்பட்ட கடமை இல்லை நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். திருமறைக்குர் அனின் 33வது அத்தியாயத்தின் 59-வது வசனத்தில் மிகத்தெளிவாக இஸ்லாமிய பெண்கள் ஹிஜாய் அணிந்து அணிய வேண்டும் என கூறப்பட்டுள்ளது இஸ்லாமியர்களுக்கு வலியுறுத்தப்பட்ட ஆடை அணிவது அவசியமில்லை என்ற தீர்ப்பை வழங்கியுள்ள உயர்நீதிமன்ற தீர்ப்பால் இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது மேலும் நீதி கிடைக்கும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் தீர்வு கிடைக்காவிட்டால் அடுத்த கட்டமாக போராட்டம் அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று தெரிவித்தார்.


பேட்டி : முகமது யூசப் - தவ்ஹீத் ஜமாத் மாநிலச் செயலாளர்

Recommended